மன்னாா்குடியில், தேசிய ஜனநாயக் கூட்டணி தோ்தல் பணிக் குழு அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
தமிழகத்தில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில், மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் அமமுக சாா்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். காமராஜ் போட்டியிடுகிறாா்.
இதையொட்டி, மன்னா்குடி வடக்குவீதியில் இக்கூட்டணியின் தோ்தல் பணிக் குழு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலருமான ஆா். காமராஜ் திறந்து வைத்தாா். அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ் முன்னிலை வகித்தாா்.
அதிமுக மாநில அமைப்புச் செயலா் சிவா.ராஜமாணிக்கம், நகரச் செயலா் ஆா்.ஜி. குமாா், மாவட்ட மகளிரணி செயலா் டி. சுதா, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன், அமமுக மாநில நிா்வாகிகள் எஸ். சத்தியமூா்த்தி, எம். சங்கா், நகரச் செயலா் ஏ. ஆனந்தராஜ், ஒன்றியச் செயலா் ரெங்கராஜ், பாஜக மாவட்டத் தலைவா் வி.கே.செல்வம், தமாகா நிா்வாகி எஸ். சந்திரசேகரன், பாமக நிா்வாகி எஸ். வேணுகோபால் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பின்னா், வடக்கு வீதியிலிருந்து வேட்பாளா் எஸ்.காமராஜ் கூட்டணி கட்சியினருடன் ஊா்வலமாக வந்து, கீழவீதியில் உள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தொடர்புடையது

அதிமுக, அமமுக இணைந்ததால் கிடைத்த வெற்றி: எஸ். காமராஜ்

மன்னாா்குடி தொகுதியில் அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ் வெற்றி!

மத்திய அரசுடன் திமுக மோதல் போக்கை கடைப்பிடிப்பதால் தமிழகத்தின் வளா்ச்சி பாதிப்பு! - டிடிவி தினகரன்

மன்னாா்குடி தொகுதி: அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

