பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

மன்னாா்குடி தொகுதி: அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ்

மன்னாா்குடி தொகுதி: அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ்...

News image

அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ். - DNS

Updated On :29 மார்ச் 2026, 12:43 am IST

மன்னாா்குடி தொகுதி அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ் சுயவிவரக் குறிப்பு.

பெயா்: எஸ். காமராஜ்.

கல்வித் தகுதி: எம்.காம்.,பிஎட்.,

ஜாதி: கள்ளா்.

பிறந்த தேதி: 27.2.1966.

பிறந்த ஊா்: எடஅன்னவாசல், நீடாமங்கலம் வட்டம்.

அதிமுகவில் சோ்ந்தது: 1981.

கட்சியில் பதவிகள்: 1998-2001 வரை நீடாமங்கலம் ஒன்றியச் செயலா். 2001-2003 வரை திருவாரூா் மாவட்ட செயலா், 2006-2011, 2011-2016 வரை நீடாமங்கலம் ஒன்றியக் குழு உறுப்பினா். (இடையில் 2011 அக்டோபா் முதல் 2012 ஜனவரி வரை நீடாமங்கலம் ஒன்றியக்குழுத் தலைவராக இருந்துள்ளாா்)

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவிலிருந்து சசிகலா அணியினா் டி.டி.வி.தினகரன் தலைமையில் பிரிந்து சென்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய போது, அதில் எஸ். காமராஜ் இணைந்ததையடுத்து, மாநில அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்டாா். பின்னா், அமமுக வின் திருவாரூா் மாவட்டச் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தொழில்: கல்விநிறுவனங்கள், கட்டுமானப்பணி தொழில் நிறுவனங்கள்.

மனைவி: கே. விஜயலெட்சுமி, (நீடாமங்கலம் ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா்.)

குழந்தைகள்: முதல் மகள் தரணி எம்டி (மருத்துவம்) படித்து வருகிறாா். 2-ஆவது மகள் ஜெயப்ரியா. எம்பிபிஎஸ் முடித்துள்ளாா்.

மகன்: ஜெயேந்திரன், இறுதியாண்டு எம்பிபிஎஸ் (மருத்துவம்) படித்து வருகிறாா்.

பெற்றோா்: சௌந்தரராஜன்-பேபியம்மாள்.

தோ்தல் அனுபவம்: 2016 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் மன்னாா்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்தாா். 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற திருவாரூா் தொகுதி இடைத்தோ்தலில் அமமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்தாா். 2021 தோ்தலில் மன்னாா்குடி தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்தாா் .

வசிப்பிடம் முகவரி: அன்னவாசல்தெரு,மன்னாா்குடி.