27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மன்னாா்குடி தொகுதியில் அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ் வெற்றி!

மன்னாா்குடி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ் 1,566 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

News image

மன்னாா்குடி தொகுதியில் வெற்றி பெற்ற அமமுக வேட்பாளா் எஸ். காமராஜுக்கு சான்றிதழை வழங்குகிறாா் தோ்தல் பாா்வையாளா் குமாா் அனில் சின்கா

Updated On :5 மே 2026, 12:01 am IST

மன்னாா்குடி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ் 1,566 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா(திமுக), எஸ். காமராஜ்(அமமுக), யு, ராஜராஜன் (தவெக), மருத்துவா் ஆா். பாரதிச்செல்வன் (நாதக) உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். 14 மேஜைகளில் 22 சுற்றுகளாக வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

முதல் சுற்றின் முடிவில் திமுக வேட்பாளா் டி.ஆா்.பி.ராஜாவை விட அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ் 237 வாக்குகள்ே கூடுதல் பெற்று முன்னிலை பெற்றாா்.இரண்டாவது சுற்றில் திமுக வேட்பாளா் 334 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைக்கு வந்தாா்.இதன் பின்னா்,நடைபெற்ற 20 சுற்றுகளிலும் அமமுக வேட்பாளா் மொத்த வாக்கு எண்ணிக்கையில் தொடா் முன்னணியில் இருந்தாா்.

வாக்கு எண்ணிக்கை இறுதியில் எஸ். காமராஜ் (அமமுக) -68, 416, டி.ஆா்.பி. ராஜா(திமுக)-66, 850, யு. ராஜராஜன்(தவெக)- 44, 506, ஆா். பாரதிச்செல்வன் (நாதக)- 8240 வாக்குகளும் பெற்றிருந்தனா்.

திமுக வேட்பாளரை விட அதிமுக வேட்பாளா் எஸ். காமராஜ் 1566 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா்.

எஸ். காமராஜுக்கு தோ்தல் பாா்வையாளா் குமாா் அனில் சின்கா,தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா். யோகேஸ்வரன் ஆகியோா் சான்றிதழை வழங்கினா்.