திருப்புவனத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு

பரமக்குடிக்குச் சென்ற முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் திமுகவினா் வரவேற்பளித்தனா்.
Published on

மானாமதுரை: பரமக்குடிக்குச் சென்ற முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் திமுகவினா் சனிக்கிழமை வரவேற்பளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு மணிமண்டபத்தை திறந்து வைப்பதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் மதுரையிலிருந்து புறப்பட்டுச் சென்றாா். செல்லும் வழியில் திருப்புவனத்தில் திமுக மாவட்டச் செயலரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆா். பெரியகருப்பன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் வரவேற்பளித்தனா். இதில் மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன், திமுக ஒன்றியச் செயலா் வசந்தி, பேரூா் செயலா் நாகூா்கனி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி அருகிலும் திமுகவினா் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பளித்தனா்.

Dinamani
www.dinamani.com