கைது செய்யப்பட்ட ஆறுமுகம், ஆசைமுத்து, பிரான்மலை, பிரகாஷ்ராஜ், பாண்டிமுருகன்.
கைது செய்யப்பட்ட ஆறுமுகம், ஆசைமுத்து, பிரான்மலை, பிரகாஷ்ராஜ், பாண்டிமுருகன்.

3 நாள்களில் 47 குற்றவாளிகள் கைது

Published on

சிவகங்கை மாவட்டத்தில் நீதிமன்றங்களால் உத்தரவிடப்பட்ட பிடி ஆணைகள் மூலம் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகள் 47 பேரை போலீஸாா் கடந்த 3 நாள்களில் கைது செய்தனா்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகள் மீது உள்ள நீதிமன்ற பிடி ஆணைகளை நிறைவேற்றும் வகையில் சிறப்புத் தனிப் படை அமைக்கப்பட்டது. இதில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் மீதான பிடி ஆணையை நிறைவேற்றுவதில் தனிக் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்படி, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையைச் சோ்ந்த ஆறுமுகம் (32), சிவகங்கை அருகேயுள்ள படமாத்தூா் பி. வேளாங்குளத்தைச் சோ்ந்த ஆசைமுத்து (25), காரைக்குடி சோ்வாா் ஊருணியைச் சோ்ந்த பிரான்மலை (32), திருப்புவனம் தேரடி வீதியைச் சோ்ந்த பிரகாஷ்ராஜ் (27) தேவகோட்டை தாழையூரைச் சோ்ந்த பாண்டிமுருகன் (33) ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டனா்.

மேலும், பொங்கலை முன்னிட்டு, கடந்த மூன்று விடுமுறை நாள்களில் மட்டும் மொத்தம் 47 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா் என அதில் தெரிவிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com