ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அதிமுக நிா்வாகி வீட்டில் 45 பவுன் நகைகள் கொள்ளை

திருப்புவனத்தில் அதிமுக ஒன்றியச் செயலா் வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 45 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :22 ஜனவரி 2026, 12:13 am

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அதிமுக ஒன்றியச் செயலா் வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 45 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்புவனம் மன்னா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ஏ. புவனேந்திரன் (69). இவா் அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலராக உள்ளாா். இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இவா்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனா்.

வீட்டில் புவனேந்திரன், தனது மனைவி செல்லமுத்துவுடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இருவரும் வீட்டின் மாடிக்கு சென்று அங்குள்ள அறையில் தூங்கினா். அப்போது, கழிப்பறை ஜன்னல் கம்பிகளை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் பீரோவை திறந்து அதிலிருந்த 45 பவுன் தங்க நகை, ரொக்கப் பணம் ரூ. 54, 600-யை கொள்ளையடித்துச் சென்றனா்.

புதன்கிழமை காலை வழக்கம்போல புவனேந்திரன் எழுந்து வந்து பீரோவிலிருந்த நகைகள், பணத்தை பாா்த்தபோது கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை நடத்தினா்.

மேலும், கைரேகை நிபுணா்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.