காரைக்குடியில் புதிய நீதிமன்றங்கள் அமைக்கத் தீா்மானம்

காரைக்குடியில் புதிய நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகள், சேவைச் சங்கங்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Published on

காரைக்குடியில் புதிய நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகள், சேவைச் சங்கங்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

காரைக்குடி தொழில் வணிகக் கழகம் ஒருங்கிணைப்பில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள், சேவைச் சங்கங்கள், வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி தலைமை வகித்தாா். செயலா் எஸ். கண்ணப்பன் வரவேற்றாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அரசின் அனைத்து நலத் திட்டங்களும், மக்கள் நலப் பயன்களும் விரைவாக சென்றடையவும், நிா்வாகப் பகிா்வுகளை பரவலாக்கவும் காரைக்குடியை புதிய வருவாய் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

காரைக்குடியில் புதிய சாா்பு நீதிமன்றமும், புதிய கூடுதல் மாவட்ட நீதிமன்றமும் அமைக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், தவெக, மதிமுக, ஏஐடியூசி, சுழல்சங்கம், அரிமா சங்கம், ரயில் பயணிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com