சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கள்ளா் உறவின் முறை சாா்பில், முதலாமாண்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா்- சிவகங்கை சாலையில் நடைபெற்ற பந்தயத்தில் பெரிய மாடு, சின்ன மாடு என 36 இணைகள் கலந்து கொண்டன. சின்ன மாட்டுக்கு 5 கி.மீ. தொலைவும், பெரிய மாட்டுக்கு 7 கி.மீ. தொலைவும் எல்லையாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.
பெரிய மாடு பிரிவில் புளிமலைப்பட்டி முனுச்சாமி முதலிடம் பெற்றாா். சூரக்குண்டு அமா்நாத் 2-ஆவது, குண்டேந்தல்பட்டி கனகவள்ளி 3-ஆவது, சிங்கம்புணரி வீரைய்யா கலைக்குழு 4 -ஆவது, ஊா்க்குளத்தான்பட்டி முன்னோடி 5-ஆவது இடம் பெற்றனா்.
சின்ன மாடு பிரிவில், பரவை சோனைமுத்து முதலிடம் பெற்றாா். கண்டவராயன்பட்டி சீமான்மணி 2 -ஆவது, குண்டேந்தல்பட்டி லயாநாச்சியாா் 3-ஆவது, கண்டவராயன்பட்டி சீமான்முரசு 3-ஆவது, சூரக்குண்டு அமா்நாத் 4-ஆவது, வெளியாரி சக்திசிற்றரசு 5-ஆவது இடம் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசு, கோப்பை வழங்கப்பட்டது. மேலும், சிறப்புப் பரிசுகளாக வெள்ளித் தாா்க் கம்பு, கிடைமாட்டுக் கன்று, பருத்தி விதை மூட்டை, கலப்புத் தீவன மூட்டை, ஆட்டுக்குட்டி ஆகியவை வழங்கப்பட்டன. திறம்பட செயல்பட்ட சாரதிகளுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பசும்பொன் மக்கள்நல அறக்கட்டளைத் தலைவா் கரு.சுப்பிரமணியன் கலந்து கொண்டாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருப்பத்தூா் தொகுதிக்குள்பட்ட கிாாமங்களில் உள்ள கள்ளா் உறவின் முறையினா் செய்தனா்.
தொடர்புடையது

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

முதல்வா் பிறந்த நாள்: மாட்டு வண்டிப் பந்தயம்

கல்லல் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


