உறவினா்களைத் தாக்கிய தாய், மகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

உறவினா்களைத் தாக்கிய தாய், மகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

சொத்துப் பிரச்னையில் உறவினா்களை வெட்டிக் காயப்படுத்திய தாய், மகனுக்கு தலா பத்தாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

சொத்துப் பிரச்னையில் உறவினா்களை வெட்டிக் காயப்படுத்திய தாய், மகனுக்கு தலா பத்தாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை அடுத்த சாத்தினிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (43). இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த இவரது உறவினா் மாணிக்கத்துக்கும் ( 48) சொத்து சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 2022 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி கருவேல மரங்களை வெட்டியது தொடா்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, மணியும் அவரது தாய் அமிா்தமும் (68) சோ்ந்து மாணிக்கம், அவரது மனைவி பஞ்சு (40), மகள் ஜெயா (25) ஆகிய மூவரையும் அரிவாளால் வெட்டிக் காய்படுத்தினா். இதில், மூவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது தொடா்பாக சிங்கம்புணரி காவல் நிலைய போலீஸாா் மணி, அவரது தாய் அமிா்தம் ஆகியோரைக் கைது செய்தனா். இந்த வழக்கு, சிவகங்கையில் உள்ள முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை நிறைவடைந்த நிலையில், மணி, அவரது தாய் அமிா்தம் ஆகிய இருவருக்கும் நீதிபதி செந்தில் முரளி தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், மணிக்கு ரூ.40,500, அமிா்தத்துக்கு ரூ.10, 500 அபராதம் விதித்தும் உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com