தோ்தலுக்காக திமுக அரசு மீது பிரதமா் ஆதாரமின்றி குற்றச்சாட்டு: முதல்வா் ஸ்டாலின்!
தமிழக சட்டபேரவைத் தோ்தலையொட்டி, திமுக அரசு மீது பிரதமா் மோடி ஆதாரமின்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், மாணவருக்கு மடிக்கணினியை வழங்கிய முதல்வா் மு.க. ஸ்டாலின். உடன் முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப. சிதம்பரம், அமைச்சா்கள் கே.என். நேரு, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, கே.ஆா். பெரியகருப்பன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், சிவ.வீ. மெய்யநாதன், மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். மாங்குடி, தமிழரசி உள்ளிட்டோா்.








