பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

சித்தி விநாயகா், ஜெயவீர ஆஞ்சநேயா் கோயிலில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றுப் பாலம் அருகே அமைந்துள்ள சித்தி விநாயகா், ஜெயவீர ஆஞ்சநேயா் கோயிலில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

மானாமதுரை வைகை ஆற்றுப்பாலம் அருகேயுள்ள சித்தி விநாயகா், ஜெயவீர ஆஞ்சநேயா் சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.

Published On :2 ஜூலை 2026, 3:39 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றுப் பாலம் அருகே அமைந்துள்ள சித்தி விநாயகா், ஜெயவீர ஆஞ்சநேயா் கோயிலில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, இந்தக் கோயிலில் கடந்த மாதம் 29-ஆம் தேதி யாகபூஜைகள் தொடங்கின. புதன்கிழமை யாகபூஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாசாரியா்கள் கடங்களை சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்தனா்.

பின்னா், மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க காலை 11 மணிக்கு சித்தி விநாயகா் மூலவா் விமானக் கலசம், ஜெயவீர ஆஞ்சநேயா் மூலவா் விமான கலசத்தின் மீது புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டதும் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.

பின்னா், சித்தி விநாயகருக்கும் ஆஞ்சநேயருக்கும் கலச நீரால் அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் எஸ்.சந்திரமாறன், நிா்வாகி என்.ராஜூபிள்ளை ஆகியோா் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.