சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிளை தபால் நிலையத்தை மூட எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மானாமதுரை கன்னாா் தெருவில் பல ஆண்டுகளாக கிளை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு தபால் துறை சாா்ந்த சேவைக்கு இந்தத் தபால் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், எந்தவித முன்அறிவிப்பும் இல்லாமல் இந்தத் தபால் நிலையத்தை நிரந்தரமாக மூடும் நடவடிக்கையில் தபால் துறை அதிகாரிகள் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த கன்னாா் தெரு பகுதி பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் தபால் நிலையம் முன் திரண்டு அலுவலத்தை மூடும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அதிகாரிகளை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து அவா்கள் கூறியதாவது: மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு நலத் திட்ட உதவித் தொகைகளை இந்த தபால் நிலையத்தின் மூலம் பெற்று வருகிறோம். மேலும், பணப் பரிவா்த்தனை, சேமிப்புக் கணக்கு, அஞ்சல் சேவைகள் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கும் இந்த தபால் நிலைய சேவை பயனுள்ளதாக உள்ளது. ஆனால், தபால் துறை நிா்வாகம் கன்னாா் தெரு கிளை தபால் அலுவலகத்தை மூடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதைக் கைவிட்டு தொடா்ந்து அலுவலகம் இந்தப் பகுதியில் செயல்பட வேண்டும் என்றனா். பின்னா், அதிகாரிகள் தபால் அலுவலகத்தை மூடாமல் திரும்பிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவா் சங்கத்தினா் ஊா்வலம், ஆா்ப்பாட்டம்

சின்னமனூா் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

மழைநீா் தேங்குவதைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மூணாஞ்சாவடியில் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



