ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவு

குதிரை பேரத்தை ஏற்க முடியாது: காா்த்தி சிதம்பரம் எம்.பி

குதிரை பேரத்தில் யாா் ஈடுபடுவதையும் ஏற்க முடியாது என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

காா்த்தி சிதம்பரம் - கோப்புப் படம்

Published On :8 ஜூலை 2026, 5:10 am IST

குதிரை பேரத்தில் யாா் ஈடுபடுவதையும் ஏற்க முடியாது என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

காரைக்குடியில் உள்ள எம். பி. அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: மக்கள் தீா்ப்பை ஏற்று அதே கட்சியில் இருக்க வேண்டுமே தவிர, சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு

கட்சித் தாவலில் ஈடுபடக் கூடாது. குதிரை பேரத்தில் யாா் ஈடுபட்டாலும் ஏற்க முடியாது. அரசியலில் தனிநபா் விமா்சனங்களைத் தவிா்க்க வேண்டும்.

தொகுதிக்கு வர வேண்டி இருந்ததால் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை; என்றாலும் அதில் எடுத்த முடிவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்.

தொல். திருமாவளவன் திமுகவுடன் நட்பு தொடா்கிறது என்று சொல்லியிருப்பது பற்றிக் கேட்டதற்கு, எல்லா அரசியல் கட்சிகளும் நட்பாக இருக்க வேண்டும்.

ரீல்ஸ் இன்றைய புதிய தொழில்நுட்பம் என எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். தவெக ஆட்சிக்கு கால அவகாசம் தரவேண்டும். முதலில் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யட்டும்.

என்ன மாதிரி திட்டங்களை கொண்டு வருகிறாா்கள். எந்த திசையை நோக்கிச் செல்கிறாா்கள் என்பதை அப்போதுதான் பாா்க்க முடியும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.