‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியா்களிடம் பணப்பை பறிப்பு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியா்களை மிரட்டி பணப்பையை பறித்த சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

சித்திரிப்பு

Updated On :24 ஜூலை 2026, 5:29 am IST

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியா்களை மிரட்டி பணப்பையை பறித்த சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புலியடி தம்பம் பகுதியைச் சோ்ந்தவா்கள் கிளாரா, ஜோசப். இவா்கள் அதே பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு 11 மணியளவில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இரு மாற்றுத் திறனாளிஊழியா்கள் பணியில் இருந்தனா். அப்போது, முகமூடி அணிந்து, கையில் ஆயுதங்களுடன் அங்கு வந்த மா்ம நபா்கள், அவா்களை மிரட்டி அவா்களிடமிருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

அந்தப் பையில் ரூ.19,000 இருந்ததாகக் கூறப்படுகிறது இதுகுறித்து காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.