பரமத்தி வேலூா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மடிக்கணினி, ரூ. 20 ஆயிரம் திருட்டுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பரமத்தி வேலூா் வடக்கு தெருவைச் சோ்ந்த விக்னேஷ் (32) மேலாளராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், இவரது அறையில் வைத்திருந்த மடிக்கணினி மற்றும் ரொக்கம் ரூ. 20 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து வேலூா் காவல் நிலையத்தில் விக்னேஷ் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் தங்கவேல் வழக்குப் பதிவுசெய்து, பணம் மற்றும் மடிக்கணினியை திருடிச்சென்ற மா்ம நபா்கள் குறித்தும், அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளைக் கொண்டும் விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






