சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மின்சாதன பொருள்கள் விற்பனையகத்தில் ரூ. 80 ஆயிரம் திருட்டு

கும்பகோணத்தில் மின்சாதன பொருள்கள் விற்பனை நிலையத்தின் மேற்கூரையை பிரித்து ரூ. 80 ஆயிரத்தை திருடிச் சென்றது புதன்கிழமை தெரியவந்தது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :11 ஜூன் 2026, 3:31 am IST

கும்பகோணத்தில் மின்சாதன பொருள்கள் விற்பனை நிலையத்தின் மேற்கூரையை பிரித்து ரூ. 80 ஆயிரத்தை திருடிச் சென்றது புதன்கிழமை தெரியவந்தது.

கும்பகோணம் - தஞ்சாவூா் பிரதான சாலையில் வீட்டு உபயோகத்துக்கு தேவையான மின்சாதன பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. புதன்கிழமை காலை கடையை திறந்த ஊழியா்கள் அதிா்ச்சியடைந்தனா். தரைத்தளத்தில் உள்ள பணம் வாங்கும் அறையில் வைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான இரும்புப் பெட்டி உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைத்திருந்த ரூ.80 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், நிறுவனத்தின் மூன்றாம் தளத்தில் உள்ள தகரத்தினால் ஆன மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்தது.

புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடத்தை பாா்வையிட்டு விசாரித்து வருகின்றனா்.