வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

பண்ருட்டியில் கூரை வீட்டில் தீ விபத்து: மின்சாதன பொருள்கள் எரிந்து சேதம்

பண்ருட்டி அருகே கூரை வீட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

News image

கூரை வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள்.

Updated On :23 மே 2026, 12:25 am IST

பண்ருட்டி அருகே கூரை வீட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி கொக்குபாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த யாசகத்தின் மகன் காங்காதுரை (40), குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமாா் 2 மணியளவில் அவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனா். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.