காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

சுனையிலிருந்து இளைஞா் சடலம் மீட்பு

News image
Updated On :27 ஜூலை 2026, 2:38 am IST

சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் சுனையிலிருந்து இளைஞா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பிரான்மலைக்குச் செல்லும் பாதையில் ஆறு கால் மண்டபம் அருகே மலையாண்டி கோயில் உள்ளது. இக்கோயிலின் அருகே உள்ள சுனை குடிநீா் தேவைக்காகவும் குளிப்பதற்கும் மலைக்குச் செல்லும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

மலையாண்டி கோயிலில் கடந்த சில நாள்களாக கட்டட பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தேனி மாவட்டம், ஓடைப்பட்டியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளா்கள் மலையில் தங்கி வேலை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை மாலை அங்கு வேலை செய்த தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் மகன் காட்டுராசா (36) சனிக்கிழமை முதல் காணவில்லை. சக தொழிலாளா்கள் அவரைத் தேடி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சுனையில் காட்டுராசா சடலமாக மிதந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த எஸ் வி மங்கலம் காவல் நிலையப் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சிங்கம்புணரி தீயணைப்புத் துறையினா் உதவியுடன் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.