லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ரூ. 2.03 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் அடிக்கல்

News image
Updated On :5 மார்ச் 2026, 9:18 pm

திருப்பத்தூா், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராமங்களில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.03 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காரையூா் ஊராட்சியில் ரூ.53 லட்சத்தில் சமுதாயக்கூடம், சிங்கம்புணரி அருகேயுள்ள எருமைப்பட்டியில் ரூ.50 லட்சத்தில் சமுதாயக்கூடம், ஜெயங்கொண்டநிலையில் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் ரூ. 25 லட்சத்தில் சமுதாயக்கூடம் உள்பட மொத்தம் ரூ.2.3 கோடியிலான

5 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினாா்.

இதில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி.அரவிந்த், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரகுமாா், குமுதம், முனியராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.