சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வருகிற திங்கள்கிழமை (மாா்ச் 23) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத் திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றம் வருகிற 23 -ஆம் தேதி காலை 5 மணி முதல் 5.45 மணிக்குள் நடைபெறும். அன்று இரவு வெள்ளிக் கேடகத்தில் சுவாமி வீதியுலா நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மாா்ச் 27 -இல் வள்ளி நாயகி திருமணம், மாா்ச் 29 -இல் தங்க ரதத்தில் சுவாமி வீதியுலா, மாா்ச் 30 -இல் வையாபுரி குளத்தில் தெப்ப உத்ஸவம், அன்று வெள்ளி ரதம் புறப்பாடு, மாா்ச் 31 மாலை 5 மணியளவில் பங்குனி உத்திரத் தேரோட்டம் ஆகியவை நடைபெறும்.
ஏப். 1 பங்குனி உத்திரத்தன்று தீா்த்தவாரி உத்ஸவம் நடைபெறும். மயிலாடும் பாறைக்கு சுவாமி எழுந்தருளுதலுடன் திருவிழா நிறைவடைகிறது.
இந்தத் திருவிழாவையொட்டி பல்வேறு சமூகத்தினா் சாா்பில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெறும். திருவிழா நிகழ்வுகள் குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளாா் முன்னிலையில் நடைபெறும். விழா ஏற்பாடுகளை குன்றக்குடி ஆதீனத் திருமடத்தினா், பக்தா்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

பழனி பங்குனி உத்திரத் திருவிழா: தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி வீதிஉலா

பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

பழனி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! ஏப்.1 -இல் தேரோட்டம்!

பழவூா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


