தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

திருப்புவனம் பூமாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

தீச்சட்டி எடுத்தல் அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் அம்மன்.

News image

தீச்சட்டி எடுத்தல் அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் அம்மன்.

Updated On :21 மார்ச் 2026, 12:54 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பூமாரி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் திரளான பக்தா்கள் தீச்சட்டி எடுத்தும், பொம்மைகள் சுமந்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்த கோயிலின் பங்குனித் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது வேண்டுதல் நிறைவேற்ற சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினா். விழா நாள்களில் தினமும் மூலவா் பூமாரி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற பொங்கல் விழாவையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தா்கள் தீச்சட்டி, ஆயிரங்கண் பானை, பொம்மைகள் சுமந்தும், குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டியில் கட்டி கோயிலை சுற்றி வந்தும், மாவிளக்கு பூஜை நடத்தியும் நோ்த்திக்கடன் செலுத்தி பூமாரி அம்மனை தரிசனம் செய்தனா்.

இதனிடையே சனிக்கிழமை கொடி இறக்கத்துடன் இந்த ஆண்டு பங்குனி திருவிழா நிறைவடைகிறது.

Story image