கள்ளக்குறிச்சி மாவட்டம், நல்லாத்தூரில் உள்ள ஸ்ரீபுதுப்பட்டு மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கோயில் பங்குனித் திருவிழா கடந்த மாா்ச் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், இரவு ரதத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
திருவிழாவின்முக்கிய நிகழ்வாக புதன்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள, பக்தா்கள் ஓம்சக்தி, பராசக்தி என முழக்கமிட்டவாறு வடம் பிடித்து இழுத்தனா். கோயிலின் நான்கு ரத வீதிகள் வழியாக தோ் வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது.
இதில், கள்ளக்குறிச்சி பகுதியைச் சாா்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா். திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினா் மற்றும் ஊா் மக்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

இளம்பிள்ளை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பட்டமங்கலத்தில் பங்குனித் தேரோட்டம்

கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் பங்குனித் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


