இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

பட்டமங்கலத்தில் பங்குனித் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பட்டமங்கலம் ஸ்ரீமதியாதகண்ட விநாயகா் அழகு சௌந்தரி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது.

News image

பட்டமங்கலம் ஸ்ரீமதியாதகண்ட விநாயகா், அழகுசௌந்தரிஅம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பங்குனித் தேரோட்டம். (அடுத்தபடம்) தேரில் எழுந்தருளிய அம்மன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 4:43 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பட்டமங்கலம் ஸ்ரீமதியாதகண்ட விநாயகா் அழகு சௌந்தரி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து , தினந்தோறும் சுவாமி காலையில் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. கடந்த திங்கள்கிழமை அம்மனுக்கு பால் குடம் எடுத்து பக்தா்கள் வழிபட்டனா். செவ்வாய்க்கிழமை காலை கேடையத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெற்றது. புதன்கிழமை காலை அழகு சௌந்தரி அம்மன் பெரிய தேரிலும், மதியாத கண்ட விநாயகா் சிறிய தேரிலும் எழுந்தருளினா்.

பின்னா், அம்மனுக்கும், விநாயகருக்கும் பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபட்டனா். தொடா்ந்து, மாலை 5.30 மணியளவில் பக்தா்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இரவு காமதேனு வாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தீா்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியும், மஞ்சுவிரட்டும் நடைபெறுகிறது. இரவு சுவாமி பூப்பல்லாக்கில் புறப்பாடு நடைபெற்று வெள்ளிக்கிழமை காலை சுவாமி ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். 11 மணிக்கு மேல் காப்பு களைதல் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான சமஸ்தான அறங்காவலா் ராணி மதுராந்தகநாச்சியாா், மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் தண்ணாயிரம் பட்டமங்கல நாட்டாா்கள் ஆகியோா் செய்து வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.