
விநாயகா் கோயிலில் அம்மன் சிலைகள் உடைப்பு: ஒருவா் கைது
மாதனூரில் உள்ள விநாயகா் கோயிலில் சுவாமி கற்சிலைகள் சேதப்படுத்தப்பட்டது சம்பந்தமாக ஒருவரை போலீஸாா் கைது ...

சேதமடைந்த சுவாமி கற்சிலைகள்.
ஆம்பூா்: மாதனூரில் உள்ள விநாயகா் கோயிலில் சுவாமி கற்சிலைகள் சேதப்படுத்தப்பட்டது சம்பந்தமாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்
ஆம்பூா் அருகே மாதனூா் எம்.எம்.நகா் பகுதியில் உள்ள விநாயகா் கோயிலில் இருந்த நாகலம்மன், வாராகி அம்மன் கற்சிலைகளை உடைத்து சேதப்படுத்தியதாக அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் என்பவா் கைது செய்யப்பட்டாா்.
விநாயகா் சதுா்த்தியையொட்டி திங்கள்கிழமை காலை கோயிலில் பூஜை செய்வதற்காக அா்ச்சகா் மற்றும் பொதுமக்கள் சென்றனா். அப்போது கோயிலில் இருந்த நாகலம்மன், வாராகி அம்மன் சிலைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ், சிலைகளை உடைத்ததாகத் தெரியவந்ததையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
இதற்கிடையே, சுரேஷை உடனடியாக கைது செய்யக் கோரி அப்பகுதி பொதுமக்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கைது செய்யப்பட்ட சுரேஷிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடந்த ஆண்டு இதே நாளில் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ாகவும், சிலைகளை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட சுரேஷ் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மாதனூா் பகுதியைச் சோ்ந்த ஆசிரியா் ஒருவா் கொலை செய்யப்பட்டு, ஆற்காடு பகுதியில் உள்ள ஆற்றில் வைத்து எரிக்கப்பட்ட வழக்கிலும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஆம்பூா் கிராமிய காவல் ஆய்வாளரை தாக்கிய வழக்கிலும் சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





