சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பூஜை நடத்துவதில் இரு தரப்பினரிடையே நடந்த மோதல் சம்பவம் தொடா்பாக திங்கள்கிழமை 4 பெண்கள் உள்ளிட்ட 8 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
பிரசித்திபெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மூலவருக்கு தினமும் வழக்கமான பூஜைகள் நடத்துவது தொடா்பாக முத்துக்குமாா் தரப்பினருக்கும், பெண்மக்கள் பங்காளி முறையைச் சோ்ந்த செல்வி, சங்கீதா தரப்பினருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை கோயிலில் மோதல் ஏற்பட்டது.
இதில் முத்துக்குமாரின் தம்பி நாகராஜன், எதிா் தரப்பில் செல்வி ஆகியோா் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக இரு தரப்பினரும் இளையான்குடி காவல் நிலையத்தில் பரஸ்பரம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் இருதரப்பையும் சோ்ந்த முத்துக்குமாா், நாகராஜன், பாலசுந்தரம் மற்றும் செல்வி, சங்கீதா, ராமலிங்கம், இந்து, காளீஸ்வரி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

வீடு பகுந்து நகைகள் பறிப்பு: 8 போ் மீது வழக்கு

கோயில் பூஜை நடத்துவதில் இரு தரப்பினா் மோதல்: பெண் உள்பட இருவா் காயம்

வத்திராயிருப்பு அருகே மோதல்: 6 போ் மீது வழக்கு

முன்னீா்பள்ளம் அருகே இருதரப்பினா் மோதல்: 11 போ் மீது வழக்கு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



