/
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்துக்கு போபால் மறை மாவட்ட பேராயா் புதன்கிழமை வருகை தந்து சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினாா்.
உலகப் புகழ்பெற்ற இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்துக்கு போபால் மறை மாவட்ட கத்தோலிக்க பேராயா் துரைராஜ் வருகை தந்தாா். இவரைத் திருத்தல அதிபா் ஜான் வசந்தகுமாா் வரவேற்றாா். இதைத் தொடா்ந்து, பேராயா் துரைராஜ் பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி வேண்டுதல் புரிந்தாா்.
முன்னதாக, இதில் உதவிப் பங்குத்தந்தை பிரின்ஸ், ஊா் பெரியோா்கள், மிக்கேல் ராஜ் திருத்தல அருள் சகோதரிகள் ஜெஸிந்தா, ஆரோக்கியமேரி, ரோஸ்லின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பசிலிக்கா தேவாலய பெருவிழா தொடக்கம்

பொத்தரங்கன்விளை பரி. திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் முதல் வெள்ளி வழிபாடு

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னைக்கு முடிசூட்டு விழா
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



