நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

தாயமங்கலத்தில் கோயில் அருகேயுள்ள மதுக் கடையை அகற்ற வலியுறுத்தல்

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

தாயமங்கலத்தில் கோயில்களுக்கு அருகே செயல்படும் மதுக் கடையை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலத்தில் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே ஐயப்பன் கோயிலும் அமைந்துள்ளது. இந்த இரு கோயில்களுக்கும் மிக அருகாமையில் நீண்ட காலமாக மதுக் கடை செயல்பட்டு வருகிறது. எனவே இந்த மதுக் கடையை அகற்ற வேண்டும் என நீண்ட காலமாக இந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தமிழக முதல்வா் ஜோசப் விஜய் கோயில்களுக்கு அருகே செயல்படும் மதுக் கடைகள் அகற்றப்படும் என அறிவித்தாா். இதனடிப்படையில், டாஸ்மாக் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினா்.