கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தம்மம்பட்டி சந்தை பகுதி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தல்

தம்மம்பட்டி சந்தைக்கு அருகே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :13 மே 2026, 2:19 am IST

தம்மம்பட்டி சந்தைக்கு அருகே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழக முதல்வா் விஜய், வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, பேருந்து நிலையங்களுக்கு அருகே 500 மீட்டா் தொலைவில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளாா். இந்த நிலையில் சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டருக்குள் காய்கறிச் சந்தை பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுக் கடையால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.

இப்பகுதி வழியாக அதாவது டாஸ்மாக் கடை வழியாக ஜங்கமசமுத்திரம், குட்டிக்கரடு, மாவாறு, பெரப்பன்சோலை, கொல்லிமலைக்குச் செல்வோா் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனா். பெண்கள், பள்ளி மாணவிகள் அச்சத்துடன் இப்பகுதியை கடக்க வேண்டியுள்ளதால் இப்பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.