தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

சிவகங்கையில் வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா்.

Updated On :

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பாலமுருகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வளன் அரசு, அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் மாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் துணைத் தலைவா் ஆா்ப்பாட்டத்தை தொடக்கிவைத்துப் பேசினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தின் போது, 2026- ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளில் ஈடுபட்ட அனைத்து நிலை அலுவலா்களுக்கும் உடனடியாக மதிப்பூதியம் வழங்க வேண்டும். வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையில் உள்ள நில எடுப்பு அலகுகள், கலால் உள்ளிட்ட அனைத்துத் தற்காலிகப் பணியிடங்களில் பணிபுரிந்து வரும் அலுவலா்களுக்கு மாதந்தோறும் குறித்த தேதியில் மாதாந்திர ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

இளநிலை உதவியாளா், தட்டச்சா் ஆகியோருக்கு இடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிா்ணயம் செய்வது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டுவந்து உரிய அரசாணை வெளியிட வேண்டும்.

வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள அனைத்து அலுவலக உதவியாளா் பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்தக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER