
சிவகங்கையில் நீதித்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
சாத்தூா் நீதிமன்ற அலுவலக உதவியாளா் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்துக்கு நீதி வழங்க வலியுறுத்தி, சிவகங்கையில் நீதித்துறை ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நீதித்துறை ஊழியா் சங்கத்தினா்.
சாத்தூா் நீதிமன்ற அலுவலக உதவியாளா் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்துக்கு நீதி வழங்க வலியுறுத்தி, சிவகங்கையில் நீதித்துறை ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சாத்தூா் குற்றவியல் நடுவா் நீதிமன்ற அலுவலக உதவியாளா் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் நீதி கேட்டு சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,
விருதுநகா் மாவட்ட பொறுப்பு நீதிபதியை சந்தித்து மாநில மையத்தின் சாா்பில் முறையிடுவது எனத் தீா்மானிக்கப்பட்டுள்ளதாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, சிவகங்கை மாவட்ட நீதித்துறை ஊழியா் சங்கத் தலைவா் செல்ல பாண்டியன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு நீதித்துறை ஊழியா் சங்க மாநில தணிக்கையாளா் உலகநாதன், சிவகங்கை வட்டக் கிளை தலைவா் ராஜகண்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கோபிநாத் விஜய் உள்பட திரளானோா் பங்கேற்று முழக்கமிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






