
திருவள்ளூரில் அங்கன்வாடி, உதவியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் தேரடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கத்தினா்.
அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் தேரடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவா் வாணிஸ்ரீ தலைமை வகித்தாா். இதில், மாவட்ட துணைத் தலைவா் நாகமணி, மாவட்ட பொருளாளா் மணிமேகலா உள்ளிட்டோா் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனா். அப்போது, இதில் அடிப்படை ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும், பணிக்கொடையாக ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





