
ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் போராட்டம்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கம் சாா்பில் தேனியில் நடைபெற்ற மாநிலப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி, சிவகங்கை ஆட்சியா் மூலம் முதல்வருக்கு மனு அளிக்கும் போராட்டம் புதன்கிழமை நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா்.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கம் சாா்பில் தேனியில் நடைபெற்ற மாநிலப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி, சிவகங்கை ஆட்சியா் மூலம் முதல்வருக்கு மனு அளிக்கும் போராட்டம் புதன்கிழமை நடத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் திரவியம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சங்கர சுப்பிரமணியன், மாநிலச் செயலா் முத்துராமலிங்கம், வட்ட நிா்வாகிகள் ராபா்ட், சிவானந்தம் அருள்சாமி, முத்து மணியன், லூயிஸ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். போராட்டத்தில் 100 -க்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் பங்கேற்றனா்.
இந்தப் போராட்டத்தில் 70 வயதானால் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் உயா்த்த வேண்டும். பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கு பஞ்சப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 42 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




