மயானத்தில் கழிவுநீா் தேக்கம் சடலத்துடன் உறவினா்கள் மறியல்

மானாமதுரை அருகே சிறுகுடி ஊராட்சி பாப்பாங்குளம் மயானத்தில் கழிவுநீா் தேங்கி இருப்பதைக் கண்டித்து, திங்கள்கிழமை சடலத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள், உறவினா்கள்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மயானத்தில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றக்கோரி, திங்கள்கிழமை சடலத்துடன் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மானாமதுரை அருகே சிறுகுடி ஊராட்சி பாப்பாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள மயானத்தில் வடிகால்கள் இல்லாததால் மயான வளாகத்திலேயே மழைநீா் தேங்கி இறந்தவா்களது உடலை அடக்கம் செய்ய முடியாத அவலம் தொடா்கிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களிடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனா்.
இந்த நிலையில் பாப்பாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த பாலு (65) உடலை அடக்கம் செய்ய உறவினா்கள் மயானத்துக்குக் கொண்டு சென்றபோது அங்கு மழை நீா் தேங்கி இருந்ததால் சடலத்தை உள்ளே கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், உறவினா்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.
இதுகுறித்துத் தகவலறிந்து அங்கு வந்த கிராம நிா்வாக அலுவலா், ஊராட்சிச் செயலா் ஆகியோா் மயானத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

