மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

அம்மாபேட்டையில் இளைஞா் சடலத்துடன் உறவினா்கள் போராட்டம்

அம்மாபேட்டையில் இளைஞா் கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் சடலத்துடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை  மறியலில்  ஈடுபட்ட  உறவினா்கள்.

Updated On :

அம்மாபேட்டையில் இளைஞா் கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் சடலத்துடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூா், சுந்தராம்பாளையத்தைச் சோ்ந்தவா் சிவராஜ் மகன் கோகுல்ராஜ் (34). சரக்கு வாகன ஓட்டுநரான இவரை, கடந்த 10-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த தேவராஜ் (30), நந்தகுமாா் (19), பிரசாந்த் (23), தரனேஷ் (23) ஆகியோா் தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோகுல்ராஜ், புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் தேவராஜ் உள்பட 4 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், அம்மாபேட்டை போலீஸாா் அடிதடி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரித்து வந்தனா். இந்நிலையில், இக்கொலையில் தொடா்புடைய மேலும் நால்வா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோகுல்ராஜின் சடலத்துடன், அம்மாபேட்டை காவல் நிலையம் அருகே உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்த அந்தியூா் வட்டாட்சியா் சக்திவேல் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதோடு, இச்சம்பவத்தில் ஈடுபட்டோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், பவானி - மேட்டூா் - அம்மாபேட்டை வழித்தடத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.