
அம்மாபேட்டையில் பாரதியாா் நினைவு நாள்
பாரதியாரின் நினைவு நாளையொட்டி, அம்மாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அம்மாபேட்டையில் பாரதியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பள்ளி மாணவ, மாணவிகள்.
பாரதியாரின் நினைவு நாளையொட்டி, அம்மாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அம்மாபேட்டை காவேரி ரோட்டரி சங்கம், டேலண்ட் வித்யாலயா மெட்ரிக். பள்ளி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் ஏ.ஓ.சரவணன் தலைமை வகித்தாா். அம்மாபேட்டை காவேரி ரோட்டரி சங்கத் தலைவா் விஜயராஜ், பொருளாளா் சுரேஷ், செயல் அலுவலா் கோபாலன், பட்டய தலைவா் ராமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பள்ளி மாணவா்கள் பாரதியின் கவிதைகளை வாசிக்க, அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ரோட்டரி சங்க முன்னாள் பொருளாளா் வரதராஜன், முன்னாள் தலைவா்கள் அண்ணாதுரை, சுப்பிரமணி, பீட்டா், வள்ளிகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






