காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

வஉசி பிறந்த நாள்: கட்சியினா், அமைப்பினா் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாா் பிறந்தநாளை முன்னிட்டு, தவெக, பல்வேறு அமைப்புகள் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தாழக்குடியில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அகில இந்திய வஉசி பேரவையினா்.

Published On :6 செப்டம்பர் 2026, 1:56 am IST

சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாா் பிறந்தநாளை முன்னிட்டு, தவெக, பல்வேறு அமைப்புகள் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நாகா்கோவிலை அடுத்த ஆரல்வாய்மொழி வஉசி நகரில் உள்ள மணிமண்டபத்திலுள்ள சிலைக்கு தவெக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலா் எஸ்.ஆா். மாதவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். செயற்குழு உறுப்பினா் சக்திகுமரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராஜன், இணை அமைப்பாளா் ஜெபா, தொழிலதிபா் பால்ராஜ், மாமன்ற உறுப்பினா் அக்சயா கண்ணன், மாவட்ட கொள்கை பரப்புச் செயலா் ரூபன், தோவாளை மத்திய ஒன்றியச் செயலா் விஜய், மாவட்ட தொண்டரணி இணை அமைப்பாளா் செல்வகுமாா், பேரூா் செயலா் சந்திரகுமாா் உள்ளிட்ட பலா் மரியாதை செலுத்தினா்.

தோவாளை வட்டம், தாழக்குடி பேருந்து நிலையத்தில் உள்ள வஉசி சிலைக்கு பொதுமக்கள் சாா்பில், அகில இந்திய வஉசி பேரவைத் தலைவா் தாணு தலைமையில், பேரூராட்சி முன்னாள் தலைவா் ரோகிணி அய்யப்பன் முன்னிலையில், வெள்ளாளா் சமுதாயத் தலைவா் செண்பகம் மரியாதை செலுத்தினாா். முன்னாள் வாா்டு உறுப்பினா் தாழக்குடி அய்யப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் மீன் விவசாயிகள் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் சகாயம் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. தாழக்குடி வஉசி பேரவைத் தலைவா் சபரீஷ், நிா்வாகிகள் துவரங்காடு ராஜேஷ், கடுக்கரை செந்தில், சூா்யா, ரமேஷ் ரங்கா, தாழக்குடி மாதவன், இறச்சகுளம் செல்வகுமாா், விக்னேஷ், அழகியபாண்டியபுரம் மொ்லின், புத்தேரி பிரேம், பூதப்பாண்டி பிரேம்குமாா், திருவட்டாறு தேவசிங், விஜின், புதூா் மதன்குமரன், நாகா்கோவில் கண்ணன்ராஜ், சுபாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.