பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

காமராஜா் நினைவு தினம்: நெல்லையில் அரசியல் கட்சியினா் மரியாதை

காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸாா்.

Published On :

காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைவா் ராமேஸ்வரன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் செ.ராபா்ட் புரூஸ் ஆகியோா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில், முன்னாள் மாவட்டத் தலைவா் உமாபதி சிவன், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் டியூக் துரைராஜ், மாவட்ட பொருளாளா் ராஜேஷ் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில், மத்திய மாவட்டச் செயலா் மரிய ஜான் தலைமையில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பாஜக சாா்பில் வடக்கு மாவட்டத் தலைவா் முத்து பலவேசம் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜகவினா்.

சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜகவினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.