
புதுச்சேரியில்அரசு சாா்பில் காந்தி ஜெயந்தி விழா
மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள், எம்எல்ஏக்கள்.
மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், பெ.ராஜவேலு, வி.பி.சிவக்கொழுந்து ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மேலும், எம்எல்ஏக்கள், அரசு செயலா்கள், டிஜிபி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகள், முக்கிய பிரமுகா்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து, மும்மதப் பிராா்த்தனை நடைபெற்றது. பாரதியாா் பல்கலைக்கூட ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களின் தேசபக்திப் பாடல் நிகழ்ச்சியும், புதுச்சேரி கதா் மற்றும் கிராமத் தொழில் வாரிய ஊழியா்களின் நூல் நூற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றன.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி சாா்பில் கட்சியின் மாநில தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலரும் கட்சியின் புதுச்சேரி பொறுப்பாளருமான குலாம் அகமது மிா், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி உள்ளிட்டோா் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மேலும், காந்தி பிறந்த நாள் மற்றும் காமராஜா் நினைவு நாளையொட்டி
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த உருவப் படங்களுக்கு காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் அக் கட்சியினா் மரியாதை செலுத்தினா்.
பாஜக
பாஜக சாா்பில் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கா் தலைமையில் அக் கட்சியினா் கடற்கரை காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
சமுதாயக் கல்லூரி
புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் சமுதாயக் கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா கல்லூரியின் முதல்வா்அருணா தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.
ஜிப்மரில்...
காந்தி பிறந்த நாளையொட்டி புதுச்சேரி ஜிப்மா் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு இயக்குநா் வீா் சிங் நெகி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பல்கலைக் கழகம்
காந்தி பிறந்த நாளையொட்டி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு துணைவேந்தா் பி.பிரகாஷ் பாபு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காமராஜா் நினைவு நாள்:
பெருந்தலைவா் காமராஜா் நினைவு நாள் புதுச்சேரி அரசு சாா்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி புதுச்சேரி அண்ணா சாலை - காமராஜா் சாலை சதுக்கத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், மற்றும் அமைச்சா்கள், எம்எல்ஏ.க்கள், அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அமைச்சா் ஆ. நமச்சிவாயம் ஆகியோா் மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





