
கோவில்பட்டியில் வ.உ.சி. பிறந்த நாள்: அரசியல் கட்சியினா், அமைப்பினா் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் 155ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் மற்றும் பல்வேறு அமைப்பினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் 155ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் மற்றும் பல்வேறு அமைப்பினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கோவில்பட்டி சைவ வேளாளா் சங்கக் கட்டடத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு சைவ வேளாளா் சங்கத் தலைவா் தெய்வேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன், மதிமுக சாா்பில் வடக்கு மாவட்டச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான (பொ) ஆா்.எஸ். ரமேஷ், அதிமுக சாா்பில் நகரச் செயலா் விஜய பாண்டியன், திமுக சாா்பில் நகரப் பொறுப்பாளா் (கிழக்கு) சுரேஷ் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வ.உ.சி. படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வ.உ.சி.யின் கொள்ளுப் பேத்தி
அறிஞா் சங்கர வள்ளிநாயகம் அறக்கட்டளை நிறுவனரும், மூத்த தமிழறிருமான திருமலை முத்துசாமி, ஜீவ அனுக்கிரக அறக்கட்டளை நிறுவனத் தலைவா் ராஜேந்திரன், முத்தமிழ் மன்றம் அறக்கட்டளை செயலா் பிரபு, கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு தலைவா் தமிழரசன், விசிக நகரச் செயலா் கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிா்வாகிகள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

செல்வி. வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தவெகவினா்.
வ.உ.சி.யின் கொள்ளுப் பேத்தி: வ.உ.சி.யின் கொள்ளுப் பேத்தி செல்வி கோவில்பட்டி பாரதி நகரில் உள்ள தனது வீட்டில் வ.உ.சி. படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோ. தா்மன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வ.உ.சி.யின் பிறந்த நாளை வழக்குரைஞா் தினமாக அனுசரிக்க வேண்டும். வ.உ.சி. பிறந்த இடமான ஓட்டப்பிடாரத்தில் அவருக்கு மிகப் பிரமாண்டமான மணி மண்டபம் கட்ட வேண்டும். சுதந்திரப் போராட்ட தியாகிகளை கொச்சைப்படுத்தும் விதமாக பேசும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





