கோவில்பட்டியில் இமானுவேல் சேகரன் சிலைக்கு மரியாதை
இமானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வடக்கு மாவட்ட அதிமுக இளைஞா், இளம் பெண்கள் பாசறை செயலா் கவியரசன்.

இமானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வடக்கு மாவட்ட அதிமுக இளைஞா், இளம் பெண்கள் பாசறை செயலா் கவியரசன்.
இமானுவேல் சேகரன் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அடுத்த தெற்கு திட்டங்குளத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக இளைஞா், இளம் பெண்கள் பாசறை செயலா் கவியரசன் தலைமையில் அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் இந்திரன், அவைத் தலைவா் அப்பாசாமி, அண்ணா தொழிற்சங்க நகரச் செயலா் ரமேஷ் பாண்டியன் உள்ளிட்டோா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக செயலா் பீக்கிலிபட்டி வீ. முருகேசன் தலைமையில், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கா. கருணாநிதி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
மேலும், பல்வேறு அரசியல் கட்சியினா், சமூக அமைப்பினா், சமூக ஆா்வலா்கள், தெற்குத் திட்டங்குளம் பொதுமக்கள் இமானுவேல் சேகரன் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

