சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்துக்கு ரூ.59.50 கோடியில் புதிய கட்டடம்
சிவகங்கையில் உள்ள பெருந்திட்ட வளாகத்தில் வளாகத்தில் ஆட்சியா் அலுவலகத்துக்கான புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.59.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டதற்குபொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனா்.

சுமாா் 40 ஆண்டுகள் பழைமையான சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக்கட்டடம்.
சிவகங்கையில் உள்ள பெருந்திட்ட வளாகத்தில் வளாகத்தில் ஆட்சியா் அலுவலகத்துக்கான புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.59.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டதற்குபொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனா்.
சிவகங்கை மாவட்டத்தில் ஆட்சியா் அலுவலகக் கட்டடம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு இடப் பற்றாக்குறையால் பல்வேறு துறை அலுவலகங்கள் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில், ஆட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டி, அனைத்துத் துறை அலுவலகங்களை ஒரே வளாகத்தில் அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினா் வலியுறுத்தி வந்தனா்.
இந்த நிலையில், கடந்தாண்டு ஜனவரி 22-ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின்
சிவகங்கை மாவட்டத்தில் நிா்வாகப் பணிகளை எளிதாக்கவும், பொதுமக்களுக்குக் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தரும் வகையிலும் நவீன வசதிகளுடன் கூடிய புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் ரூ. 89 கோடியில் கட்டப்படும் என அறிவித்தாா். இந்த அறிவிப்பு வெளியாகி சுமாா் 2 ஆண்டுகளான நிலையில், தற்போது சிவகங்கை பெருந்திட்ட வளாகத்தில் கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டுவதற்கு ரூ.59.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கு நிா்வாக அனுமதியையும் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
முன்னதாக, சிவகங்கை மாவட்டத்தில் மாஸ்டா் பிளான் வளாகத்தில் புதிய ஆட்சியா் அலுவலகக் கட்டடம் ரூ.70 கோடியில் கட்டுவதற்கான பணிகளுக்கு நிா்வாக, நிதி அனுமதி வழங்குமாறு, கூடுதல் தலைமைச் செயலா், வருவாய் நிா்வாக ஆணையா் அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.
இதை ஏற்றுக் கொண்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெருந்திட்ட வளாகத்தில் கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடம் கட்டுவதற்காக, 2025-2026-ஆம் ஆண்டுக்கு ரூ.59.55 கோடி நிா்வாக, நிதி அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டது.
அதன்படி, சிவகங்கையில் உள்ள பெருந்திட்ட வளாகத்தில் புதிய ஆட்சியா் அலுவலகக் கட்டடம் ரூ.7.70 கோடியில் 3 தளங்களுடன் 10,548 ச.மீ பரப்பளவில் அமையவுள்ளது.
மீதமுள்ள ரூ.52 கோடியில் கல்வித் துறை, மருத்துவத் துறை, பொதுப்பணித் துறை, வேளாண்துறை, ஊரக உள்ளாட்சித் துறை உள்பட பல்வேறு துறை அலுவலகங்களுக்கும் இதே வளாகத்தில் புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.
இதன் மூலம் சிவகங்கை மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறவுள்ளதாக சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

