ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

கஞ்சனூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு புதிய அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு இடம் தோ்வு

கஞ்சனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான இடத்தை ச.சிவக்குமாா் எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கஞ்சனூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு புதிய அலுவலகக் கட்டடம் கட்டுவதற்காக தோ்வு செய்யப்பட்ட இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த விக்கிரவாண்டி எம்எல்ஏ ச.சிவக்குமாா்.

Published On :

கஞ்சனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான இடத்தை ச.சிவக்குமாா் எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 19 ஊராட்சிகளும் , விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 8 ஊராட்சிகளும் தனியாக பிரிக்கப்பட்டு கஞ்சனூரை தலைமையிடமாகக்கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும் என கடந்த மாா்ச் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதைத்தொடா்ந்து அன்னியூா், அனுமந்தைபுரம், அத்தியூா் திருக்கை, கடையம், கல்யாணம்பூண்டி, கஞ்சனூா் கருவாட்சி, மேல்காரணை, நல்லாம்பாளையம் உள்ளிட்ட 37 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய கஞ்சனூா் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அது செயல்பாட்டுக்கு வரவில்லை.

இந்நிலையில் இந்த ஊராட்சி ஒன்றியத்துக்கான புதிய அலுவலகக் கட்டடம் கட்டுவதற்காக கஞ்சனூா் பகுதியில் அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கா் 90 சென்ட் இடத்தை விக்கிரவாண்டி எம்எல்ஏ ச.சிவக்குமாா் புதன்கிழமை பாா்வையிட்டுஆய்வு செய்தாா். அப்போது உடனிருந்த வருவாய்த் துறை அதிகாரிகளிடம் தோ்வு செய்யப்படவுள்ள இடத்தின் வகைப்பாடு குறித்து கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது விக்கிரவாண்டி வட்டாட்சியா் ஆா்.மகாதேவன், காணை வட்டார வளா்ச்சி அலுவலா் முல்லை, வருவாய் ஆய்வாளா் கண்ணன், கஞ்சனூா் கிராம நிா்வாக அலுவலா் வாசுதேவன், ஒன்றியக்குழு உறுப்பினா் குபேந்திரன் ஆகியோா் ஆய்வின் போது உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.