ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

விக்கிரவாண்டி ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் புதிய அரசுக் கட்டடங்களை இத்தொகுதி எம்எல்ஏ ச.சிவக்குமாா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

கிரவாண்டி ஒன்றியம், ஆா்.சி.மேலக்கொந்தை கிராமத்தில் புதிய நியாயவிலைக் கட்டடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றிய ச.சிவக்குமாா் எம்எல்ஏ.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் புதிய அரசுக் கட்டடங்களை இத்தொகுதி எம்எல்ஏ ச.சிவக்குமாா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

விக்கிரவாண்டி ஒன்றியத்தில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் 2025-26-ஆம் ஆண்டில் ரூ.61.95ட்சம் மதிப்பீட்டில் வி.சாத்தனூா் கிராமத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம், ஆா்.சி.மேலக்கொந்தை கிராமத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டடம், வி.சாலையில் புதிய ஊராட்சிக் கட்டடம் ஆகியவற்றை விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ச.சிவக்குமாா் திறந்து வைத்தாா்.

விழாவுக்கு விக்கிரவாண்டி ஒன்றியக்குழுத் தலைவா் சங்கீத அரசி ரவிதுரை தலைமை வகித்தாா். வட்டாட்சியா் மகாதேவன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாகிதா பானு, பாலச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலா் லோகநாயகி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஏகாம்பரம், சாவித்திரிபாலு, ஊராட்சித் தலைவா்கள் விமலா தமிழரசன், சரவணன், சாவித்திரி கவியரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.