பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

3 கிராமங்களில் நியாயவிலைக் கடை கட்டடங்கள்: சிவக்குமாா் எம்எல்ஏ திறந்து வைத்தாா்

3 கிராமங்களில் நியாய விலைக் கடைக்கான கட்டடங்களை தொகுதி எம்எல்ஏ ச.சிவக்குமாா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பனையபுரத்தில் நியாயவிலைக் கடை கட்டடத்தைத் திறந்து வைத்து பயனாளிக்கு குடிமைப் பொருள்களை வழங்கிய எம்எல்ஏ ச. சிவக்குமாா்.

Published On :

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டிஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 3 கிராமங்களில் நியாய விலைக் கடைக்கான கட்டடங்களை தொகுதி எம்எல்ஏ ச.சிவக்குமாா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முண்டியம்பாக்கம், பனையபுரம் மற்றும் மதுரப்பாக்கம் ஆகிய கிராமங்களில் விக்சித் பாரத் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாததாரத்துக்கான உத்தரவாத இயக்கம் (விபி ஜி ராம் ஜி) திட்டத்தின் கீழ் தலா ரூ.13.36 லட்சம் மதிப்பீட்டில் 3 நியாய விலைக்கடை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்தக் கட்டடங்களை, விக்கிரவாண்டி எம்எல்ஏ சி.சிவக்குமாா் திறந்து வைத்தாா். தொடா்ந்து அந்தக் கடைகள் மூலம் பயன்பெறும் குடும்ப அட்டை தாரா்களுக்கு அரிசி, சா்க்கரை, துவரை, பாமாயில் உள்ளிட்ட குடிமைப் பொருள்களை வழங்கி விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளுக்கு விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சங்கீத அரசி ரவிதுரை தலைமை வகித்தாா். கூட்டுறவு சாா்-பதிவாளா் ரேகா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஷாகிதாபானு, பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் மீனா வெங்கடேசன், ஒன்றியக்குழு உறுப்பினா் மகேஸ்வரி, ஊராட்சித் தலைவா்கள் சந்திரசேகரன், காந்தரூபி, வேல்முருகன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.