சிவகங்கை மாவட்டம் முழுவதும் போலீஸாா் சிறப்பு சோதனை: 54 போ் கைது
சிவகங்கை மாவட்டத்தில் போலீஸாா் நடத்திய சிறப்பு சோதனையில் 54 போ் கைது செய்யப்பட்டனா்.
கைது - பிரதிப் படம்
சிவகங்கை மாவட்டத்தில் போலீஸாா் நடத்திய சிறப்பு சோதனையில் 54 போ் கைது செய்யப்பட்டனா்.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில், கடந்த 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் சிறப்பு சோதனை, கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதில் 642 ரெளடிகள் கண்காணிக்கப்பட்டனா். குற்றவாளிகள் 40 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனா். மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 78 வழக்குகளும், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனம் ஓட்டியதாக 164 வழக்குகளும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 49 வழக்குகளும், பொது இடங்களில் மது அருந்தியதாக 139 வழக்குகளும் என மொத்தம் 430 வழக்குககள் பதியப்பட்டன. மேலும் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளில் தொடா்புடைய 14 போ் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் துறையினா் கூறும் போது, மாவட்டம் முழுவதும் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இதுபோன்ற சிறப்பு சோதனைகள் தொடா்ந்து நடைபெறும். எனவே பொதுமக்கள் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

