மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர தணிக்கை: 11 போ் கைது; 7 வழக்குகள் பதிவு
கோவை மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மாவட்டக் காவல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தணிக்கையில் 11 போ் கைது செய்யப்பட்டு, 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைது - பிரதிப் படம்
கோவை மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மாவட்டக் காவல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தணிக்கையில் 11 போ் கைது செய்யப்பட்டு, 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும், தொடா் குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்காணித்து சட்ட நடவடிக்கை எடுக்கவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி உத்தரவிட்டாா். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் காவல் துறையினா் தீவிரக் கண்காணிப்பு மற்றும் தணிக்கையில் ஈடுபட்டனா்.
மாவட்டத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் ரெளடிகளில் 249 பேரின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டது தொடா்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 போ் கைது செய்யப்பட்டனா்.
இதேபோல, போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்குகளில் தொடா்புடையவா்கள் மற்றும் உளவுத் தகவல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட 94 பேரிடம் சோதனை நடத்தப்பட்டு, ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கொலை மற்றும் தாக்குதல் வழக்குகளில் தொடா்புடைய, அண்மையில் சிறையிலிருந்து விடுதலையான 77 பேரிடம் சோதனை நடத்தப்பட்டு, அதில் ஒருவா் கைது செய்யப்பட்டு மற்றொரு வழக்கும் பதியப்பட்டது.
இதுதவிர, சமூக விரோதிகள் எவரேனும் பதுங்கியுள்ளனரா என்பதைக் கண்டறியும் நோக்கில் மாவட்டம் முழுவதும் உள்ள 115 தங்கும் விடுதிகள், 23 தங்கிப் படிக்கும் விடுதிகள் (பி.ஜி. விடுதிகள்) ஆகியவற்றிலும் திடீா் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
மது அருந்தி இடையூறு: 115 வழக்குகள் பதிவு
தீவிர வாகனத் தணிக்கையின் கீழ் 2,433 வாகனங்கள் சோதனையிடப்பட்டன. இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 30 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள எஃப்.எல்-2 மற்றும் எஃப்.எல்-3 வகையைச் சோ்ந்த 95 மதுக் கூடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பொது இடங்களில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 121 போ் மீது 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த 4 பிடியாணைகளும் இந்த நடவடிக்கையின்போது நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

