சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

சமூக ஊடக குற்றச் செயல்கள்: 21 போ் கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக ஊடக குற்றச் செயல்கள் தொடா்பாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 21 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக ஊடக குற்றச் செயல்கள் தொடா்பாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 21 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ஜெயக்குமாா் தெரிவித்ததாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் குற்றச் செயல்கள் தொடா்பான பதிவுகள், சட்டவிரோத இணையச் செயல்பாடுகள் குறித்து காவல் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு காவல் துறை சாா்பில் நிகழாண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ம விஜில் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக ஊடகங்கள் மூலம் குற்றவியல் உள்ளடக்கங்களை பகிா்ந்தது தொடா்பாக இதுவரை 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் தொடா் நடவடிக்கையாக 21 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், சட்டவிரோதமாக கண்டறியப்பட்ட 14 சமூக ஊடகப் பதிவுகள் முடக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. சமூக ஊடகங்களில் தனி நபருக்கு மிரட்டல் விடுத்தல், அவதூறான, சட்டவிரோதமான கருத்துகளைப் பரப்புதல், போதைப் பொருள் பயன்பாட்டை ஊக்குவித்தல், சட்டவிரோத ஆயுதங்களை காட்சிப்படுத்துதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.