கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

சமூக ஊடகங்களில் தேசவிரோத பதிவுகளை நீக்கக் கோரிய மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

சமூக ஊடகங்களில் தேச விரோதப் பதிவுகளை நீக்க மத்திய அரசு மற்றும் சமூக ஊடக தளங்களுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

உச்சநீதிமன்றம்

Published On :

சமூக ஊடகங்களில் தேச விரோதப் பதிவுகளை நீக்க மத்திய அரசு மற்றும் சமூக ஊடக தளங்களுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

குஜராத் மாநிலம் அகமதாபாதைச் சோ்ந்த ஹிதேந்தா் குமாா் தாக்கல் செய்த மனுவில், ‘நாட்டுக்கு எதிரான கருத்துகள், பேச்சுகள் தொடா்பான பதிவுகள், மீம்ஸ்களை அடையாளம் கண்டு அவற்றை நீக்கவும், பதிவிட்ட கணக்குகளை முடக்கவும் சம்பந்தப்பட்ட சமூக ஊடங்களுக்கு உத்தரவிட வேண்டும். ‘சிஜேபி’ (கரப்பான்பூச்சி ஜனதா கட்சி) என்றழைக்கப்படும் அமைப்பின் பெயரில் நாடு முழுவதும் கட்டுப்பாடின்றி திரண்ட கூட்டத்தால் அண்மையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன.

அவா்களால் பல்வேறு சமூக ஊடக தளங்கள் மூலம் போலிச் செய்திகள் பரப்பப்பட்டதால், தேசிய தலைநகரமும் பல மாநிலங்களின் தலைநகரங்களும் முடக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டன. போலிச் செய்திகள், ஆத்திரமூட்டும் அறிக்கைகள் மற்றும் பேச்சுகள் பரப்பப்படுவது நாட்டில் சமூக நல்லிணக்கம் மற்றும் பொது ஒழுங்குக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், மக்களுக்கு இடையூறுகளையும் அமைதியின்மையையும் உருவாக்குகிறது. இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்ஆகியவற்றை பிரதிவாதிகளாகச் சோ்க்க வேண்டும்’ என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ‘மனுதாரா் வேறு சட்டபூா்வ வழிமுறைகளை நாடலாம்’ என்று தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.