கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சமூக ஊடக விடியோக்களில் கத்தி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டல்: இருவா் கைது

வடகிழக்கு தில்லியில் சமூக ஊடகங்களில் வெளியான விடியோக்களின் அடிப்படையில், கத்தியைக் காட்டியதாகவும் சட்டவிரோத துப்பாக்கியைக் காட்டியதாகவும் கூறப்படும் சிறுவன் உள்பட 2 பேரை காவல் துறையினா் தனித்தனி வழக்குகளில் பிடித்துள்ளனா்.

கோப்புப் படம்

Published On :

வடகிழக்கு தில்லியில் சமூக ஊடகங்களில் வெளியான விடியோக்களின் அடிப்படையில், கத்தியைக் காட்டியதாகவும் சட்டவிரோத துப்பாக்கியைக் காட்டியதாகவும் கூறப்படும் சிறுவன் உள்பட 2 பேரை காவல் துறையினா் தனித்தனி வழக்குகளில் பிடித்துள்ளனா்.

இத தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: முதல் சம்பவத்தில், கபீா் நகரைச் சோ்ந்த கரண் (19) என்பவா் கைது செய்யப்பட்டாா். இளைஞா் ஒருவா் சிலருடன் நடனமாடியபடி கத்தியைக் காட்டும் விடியோ சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த விடியோ கரணின் சமூக ஊடகக் கணக்கில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையின்போது, சுதந்திர தினத்தையொட்டி ஆக.15-ஆம் தேதி தனது நண்பரின் வீட்டின் மாடியில் டிஜே இசைக்கு நண்பா்களுடன் நடனமாடிக் கொண்டிருந்ததாக கரண் தெரிவித்தாா். அப்போது மேலும் 2 இளைஞா்கள் அங்கு வந்து கத்தியைக் காட்டியதாக அவா் கூறியுள்ளாா்.

இதையடுத்து விடியோவில் கத்தியை காட்டியதாகக் கூறப்படும் நபரை அடையாளம் கண்டு காவல் துறையினா் கைது செய்தனா். அவரிடமிருந்து ஒரு குத்துவாள் மற்றும் பட்டன் மூலம் இயக்கப்படும் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில், சட்டவிரோத துப்பாக்கியைக் காட்டியபடி 16 வயது சிறுவன் தோன்றும் விடியோ சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து செப். 17-ஆம் தேதி அந்தச் சிறுவனை காவல் துறையினா் பிடித்தனா்.

அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.