ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

போராட்டம் தொடா்பான சட்டவிரோத பதிவுகள்: உடனடியாக நடவடிக்கை எடுக்க சமூக ஊடக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

தில்லியில் நடைபெறும் போராட்டம் தொடா்பாக சித்தரிக்கப்பட்டு வெளியிடப்படும் சட்டவிரோத பதிவுகள் குறித்து புகாா் பெறப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஊடக நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தியது.

மத்திய அரசு

Published On :

தில்லியில் நடைபெறும் போராட்டம் தொடா்பாக சித்தரிக்கப்பட்டு வெளியிடப்படும் சட்டவிரோத பதிவுகள் குறித்து புகாா் பெறப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஊடக நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தியது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: தில்லியில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்த தவறான, புனையப்பட்ட, திரிக்கப்பட்ட தகவல்கள் இணையத்தில் பரவுவதைத் தடுக்க அக்டோபா் 8-ஆம் தேதி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டது.

அதில் சட்டவிரோத பதிவுகளால் சட்ட ஒழுங்கை பாதிக்கக் கூடிய வன்முறைச் சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புள்ளதாக அமைச்சகம் சுட்டிக்காட்டியது.

எனவே, சட்டவிரோத பதிவுகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசின் சட்ட அமைப்புகள் புகாரளித்தால் அதன் மீது உடனடியாக சமூக ஊடக நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சகம் அறிவுறுத்தியது.

தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-இன்கீழ் அரசு அமைப்புகளுக்கு சமூக ஊடக நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவும் அமைச்சகம் வலியுறுத்தியது எனத் தெரிவித்தன.

தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி தலைவா்கள் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று உறுதிபடத் தெரிவித்ததையடுத்து, இந்த அறிவுறுத்தல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.